"ரமழான் மாதத்தின் இரவுத் தொழுகையில் குர்ஆன் பிரதியை பார்த்து ஓதுவதில் எவ்விதத் தடையும் இல்லை. ஏனெனில், இதில் தொழுகையாளர்களுக்கு குர்ஆன் முழுவதையும் ஓதிக் காண்பிக்கும் நல்வாய்ப்பு உள்ளது. மேலும், தொழுகையில் குர்ஆன் ஓதுவதன் அவசியத்தைத் திருக்குர்ஆனிலும் நபிமொழியிலும் வந்துள்ள மார்க்கச் சான்றுகள் திட்டவட்டமாக நிரூபித்துள்ளன. அந்த சான்றுகள், குர்ஆனை மனனமாக ஓதுவதற்கும் குர்ஆன் பிரதியை பார்த்து ஓதுவதற்கும் என இரண்டிற்கும் பொருந்தக்கூடியவையே. நிச்சயமாக, உம்முல்முஃமினீன் அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், ரமழான் மாதத்தின் இரவுத் தொழுகைகளில் தமக்கு இமாமத் செய்யுமாறு (தொழுவிக்குமாறு) தங்களது அடிமையான தக்வான் என்பவருக்கு தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டார்கள் என்பதும், அவர் முஸஹஃபைப் பார்த்து ஓதித் தொழுவித்தார் என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை இமாம் புகாரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது நூலில்(ஸஹீஹுல் புகாரி) அறிவிப்பாளர் தொடரில் முதற்பகுதி. சொல்லப்படாத ஹதீஸ்களில் உறுதியான(சொன்னார், அறிவித்தார்) வினையச்சங்களைக் கொண்டு பதிவு செய்துள்ளார்.
தொழுகையில் திருக்குர்ஆன் பிரதியைப் பார்த்து ஓதுதல்.
கேள்வி 1255
ரமழான் மாதத்தின் தராவீஹ் தொழுகையிலும் மற்றும் சூரிய/சந்திர கிரகண தொழுகையிலும் திருக்குர்ஆன் பிரதியைப் பார்த்து ஓதுவது அனுமதிக்கப்பட்டதா இல்லையா?
பதில்
அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,
தராவீஹ் தொழுகையும் லைலத்துல் கத்ர் இரவும்
தொழுகையில் குர்ஆன் ஓதுதல்
மூலம்:
ஷேக் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மார்க்கத் தீர்ப்புகளின் தொகுப்பு - பாகம்: 2.