அரஃபா தினமும் அதன் நோன்பும் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தங்களின் சொந்தப் பகுதியில் நிகழக்கூடிய விடியற்காலை (ஃபஜ்ர்) மற்றும் சூரிய மறைவு (மக்ரிப்) ஆகிய நேரங்களின் அடிப்படையிலேயே அமையும். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதைப் போல அதன் நோன்பானது இரண்டு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும்: [அரஃபா தினத்து நோன்பைப் பொறுத்தவரை, அது அதற்கு முந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும், அதற்குப் பிந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிக்கக் காரணியாக ஆக்குவான் என்று நான் அவனிடம் ஆதரவு வைக்கிறேன். மேலும், ஆஷூரா தினத்து (முஹர்ரம் பத்தாம் நாள்) நோன்பைப் பொறுத்தவரை, அது அதற்கு முந்தைய ஒரு வருடத்தின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கக் காரணியாக ஆக்குவான் என்று நான் அவனிடம் ஆதரவு வைக்கிறேன்.] (நூல்: ஸஹீஹுல் முஸ்லிம், ஹதீஸ் எண்: 1976).
அல்லாஹ்வே மிக அறிந்தவன்