ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் உடலுறவில் ஈடுபட்டதற்கான மார்க்கப் பரிகாரம்.
ரமழான் மாதத்தின் பகல் பொழுதில் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதற்கான பரிகாரம்: நீங்கள் குளிரான அல்லது மிதமான நாட்களிலோ அல்லது உங்களது வருடாந்த விடுமுறை நாட்களிலோ தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பது உங்களின் மீது கடமையாகும். ஒருவேளை, உங்களால் எந்த வகையிலும் நோன்பு நோற்க இயலாது போனால், நீங்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க அனுமதி உண்டு. ரமழான் மாதத்தில் இந்த உடலுறவிற்கு உங்களது மனைவியும் முழுமனதோடு சம்மதித்து உடன்பட்டிருந்தால், அவருக்கும் உங்களைப் போன்றே தனித்த பரிகாரம் கடமையாகும். இந்த உடலுறவு வெவ்வேறு நாட்களில் நிகழ்ந்திருந்தால், அந்தப் புனித மாதத்தின் எத்தனை நாட்களின் கண்ணியத்தை நீங்கள் முறித்தீர்களோ, அத்தனை நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனித்தனியாகப் பல பரிகாரங்களை நீங்கள் இருவருமே நிறைவேற்ற வேண்டும்.