மக்களை நோன்பு நோற்க ஊக்குவிப்பதற்காகக் கூட்டு இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மார்க்கச் சட்டம்.

கேள்வி 1948

பொதுமக்களை கடமையில்லாத உபரியான(நபிலான) நோன்புகள் நோற்க ஊக்குவிப்பதும், அதற்காகக் கூட்டு இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் பற்றிய தங்களின் கருத்து என்ன?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

இதில் எவ்விதத் தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்; இருப்பினும், இதனைத் தவிர்ப்பதே மிகவும் ஏற்றதாகும். ஏனெனில், நபித்தோழர்கள் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) இத்தகைய வழிமுறைகளைக் கையாண்டதில்லை. எனவே, உபரி நோன்புகள் நோற்பதன் சிறப்புகளைப் பொதுமக்களுக்கு வாய்மொழியாக (உரைகள் மற்றும் அறிவுரைகள் மூலம்) கூறி ஊக்குவிப்பதே போதுமானதாகும்; இத்தகைய செயல்பாட்டு வடிவங்களின் மூலம் அவர்களை ஊக்குவிப்பதை விட அதுவே சிறந்ததாகும்.

மூலநூட்கள்

நபிலான நோன்பு

மூலம்: 

லிகாஉல் பாபில் மஃப்தூஹ் - இமாம் இப்னு உஸைமீன் / பாகம்: 247.

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android