மீலாதுவிழா கொண்டாட்டத்தில் பகிரப்படும் இனிப்புப் பண்டங்களை வாங்குவதன் மார்க்கநிலைப்பாடு.

கேள்வி 90026

மீலாதுவிழா கொண்டாட்டத்தில் பகிரப்படும் இனிப்புப் பண்டங்களை அதற்கு முன்னைய நாளில் அல்லது அந்த நாளில் அல்லது அதற்கு அடுத்த நாளிலோ சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதா, அவைகளை வாங்குவதன் சட்டம் என்ன? குறிப்பாக இந்த குறித்த எனக்குப் பண்டங்கள் இந்த நாட்களல்லாத வேறு நாட்களில் கிடைக்க மாட்டாது. தயவுசெய்து இதற்கான பதிலைத் தாருங்கள்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முதலாவது: மீலாது விழா கொண்டாடுவது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். நபியவர்களிடமிருந்தோ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அவர்களது தோழர்கள், தாபியீன்கள் அல்லது இஸ்லாமிய இமாம்களிடமிருந்தோ  இதற்கு எவ்வித ஆதாரமும் பதியப்படவில்லை. மாறாக, மார்க்கத்திற்கு முரணான பல்வேறு புதுமைகளையும் வழிகேடுகளையும் தோற்றுவித்த உபைதிய்யாக்களே இந்த விழாவையும் முதன்முதலில் உருவாக்கினர்.

இந்தக் கொண்டாட்டம் மார்க்கப் புதுமைகளில் (பித்அத்களில்) ஒன்று என்பதற்கான விரிவான விளக்கங்கள், ஏற்கனவே எமது இணையதளத்தில் கேள்வி எண்கள்: (10070) மற்றும் (148053) ஆகியவற்றுக்கான பதில்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது: அடிப்படையில், எந்தவொரு பாவகாரியத்திற்கும் துணை போகாமல் இருக்கும் மற்றும் அதனை மெருகூட்டி அதனைத் தொடர்ந்து செய்வதற்கு உற்சாகமூட்டும் வகையில் இல்லாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு விளைக்காத எந்தவொரு இணிப்பு பண்டத்தையும் வாங்குவதோ சாப்பிடுவதோ ஆகுமான ஒரு விடயமே.

ஆனால் இந்த மீலாது விழா காலத்தில் விற்கப்படும் இனிப்புப் பண்டங்களை வாங்குவதானது அதற்குத் துணை போவதாகவே விளங்குகிறது மட்டுமல்ல அதிலே ஈடுபடுவது போன்றதுதான். ஏனென்றால் பெருநாள் என்பது மனிதர்கள் வழமையாக எடுத்துக் கொள்ளும் ஒரு விடயத்தையே குறிக்கிறது. எனவே அதனைக் கொண்டாடுபவர்கள் அவர்களுடைய ஏனைய நாட்களுக்கு முரணாக வழமையாக இந்த குறிப்பிட்ட நாளில் இந்த குறிப்பிட்ட சாப்பாட்டை சாப்பிடுதல் அல்லது அந்த குறிப்பிட்ட நாளிற்காகவே அதனை செய்தல் போன்றன நடப்பதால், அதனை வாங்குவது விற்பது மற்றும் அவற்றை சாப்பிடுவது அல்லது பிறருக்கு அன்பளிப்பாக கொடுப்பது இவை எல்லாமே ஒரு வகையான கொண்டாட்டமாகவே கருதப்படும். எனவே அந்த குறிப்பிட்ட நாளில் அதனைத் தவிர்ப்பது அவசியம்.

"மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட இந்தக் காதலர் தினக் (Valentine's Day) கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக, இதய வடிவிலான (Heart shape) படங்கள் வரையப்பட்ட சிவப்பு நிறத்திலான இனிப்புப் பண்டங்களை வாங்குவது குறித்து, 'ஃபதாவா அல்-லஜ்னா அத்து-தாயிமா' நூலில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது:

குர்ஆன் மற்றும் சுன்னாவின் தெளிவான ஆதாரங்கள் - அதன் மீதே இந்த உம்மத்தின் நேர்மையான முன்னோர்கள் (ஸலஃபுகள்) ஏகோபித்த கருத்தில் உள்ளனர் - இஸ்லாமிய மார்க்கத்தில் பெருநாட்கள் இரண்டு மட்டுமே என்பதை நமக்கு உணர்த்துகின்றன; அவை நோன்புப் பெருநாள் மற்றும்ஹஜ் பெருநாள் ஆகியவையாகும். இவ்விரண்டைத் தவிர வேறு எந்தவொரு பெருநாளாக இருந்தாலும் சரி, அது ஒரு குறிப்பிட்ட நபரோடு, ஒரு கூட்டத்தோடு, ஒரு வரலாற்று நிகழ்வோடு அல்லது வேறு எந்தவொரு காரணத்தோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட புதுமையான (பித்அத்தான) பெருநாட்களே ஆகும். எனவே, இஸ்லாமியர்கள் அத்தகைய விழாக்களைக் கொண்டாடுவதோ, அவற்றை அங்கீகரிப்பதோ, அதில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ அல்லது அதற்கு எவ்விதத்திலாவது உதவி செய்வதோ மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. ஏனெனில், இச்செயலானது அல்லாஹ் விதித்துள்ள வரம்புகளை மீறுவதாகும்; எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்.....

அதேபோன்று, ஒரு முஸ்லிம் இத்தகைய காதலர் தினத்திற்கோ அல்லது மார்க்கத்தால் விலக்கப்பட்ட இதர பிற திருவிழாக்களுக்கோ எவ்விதத்திலாவது உதவி செய்வதும் முற்றிலும் விலக்கப்பட்டதும் ஆகும். அது உணவளித்தல், பானங்களை வழங்குதல், (அதற்கான பொருட்களை) விற்றல், வாங்குதல், உற்பத்தி செய்தல், பரிசுகளை வழங்குதல், வாழ்த்துச் செய்திகளை அனுப்புதல், விளம்பரம் செய்தல் அல்லது இது போன்ற வேறு எந்தவொரு காரியமாக இருந்தாலும் சரியே! ஏனெனில், இவை அனைத்தும் பாவமான காரியங்களுக்கும், வரம்பு மீறல்களுக்கும், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளுக்கு மாறு செய்வதற்கும் பரஸ்பரம் துணை புரிவதாக அமைந்துவிடும். நிச்சயமாக, வல்லமைமிக்க அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: {நன்மைக்கும் பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திற்கும் வரம்பு மீறலுக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்} (அல்-மாயிதா: 02).

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

பித்ஆ

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

answer

சம்பந்தப்பட்ட தலைப்புகள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android