தவஸ்ஸுலின் வகைகள்.

கேள்வி 979

தவஸ்ஸுலின்(வேண்டுதலின்) வகைகள் யாவை?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

'தவஸ்ஸுல்' (வேண்டுதல்)  மற்றும் 'வஸீலா' என்பது பின்வரும் நான்கு விஷயங்களில் ஒன்றைத்தான் குறிக்கும்:

முதலாவது வகை: எதனை நிறைவேற்றாமல் ஈமான் முழுமை பெறாதோ அதுவாகும். அதாவது, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது, அவனது தூதர் மீது நம்பிக்கை கொள்வது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிபடுவது ஆகியவற்றின் மூலம் அல்லாஹ்விடம் நெருக்கத்தைத் தேடுவதாகும். இதனைதான் பின்வரும் இறைவசனம் குறிக்கிறது:

"முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் அவனை நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள்." (சூரா அல்-மாஇதா: 35)

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகளை முன்வைத்து அல்லாஹ்விடம் வேண்டுவது; மேலும், தவஸ்ஸுல் செய்யக்கூடியவர் தான் செய்த நற்செயல்களை முன்வைத்து அதன் மூலம் அல்லாஹ்விடம் கையேந்துவது போன்றவை இதற்குள் உள்ளடங்கும்.

இரண்டாவது வகை: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களிடம் துஆ செய்யக் கோருவதன் மூலமும், முஃமின்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்வதன் மூலமும் அல்லாஹ்விடம் நெருங்குதல். இது முதலாவது வகையைச் சார்ந்ததும், மார்க்கத்தில் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டதும் ஆகும்.

மூன்றாவது வகை: படைப்புகளின் அந்தஸ்தையோ அல்லது அவர்களின் உடலையோ முன்வைத்து வேண்டுதல் செய்வதாகும். உதாரணமாக: "அல்லாஹ்வே! உன்னுடைய நபியின் அந்தஸ்தைக் கொண்டு நான் உன்னை முன்னோக்குகிறேன்" என்று கூறுவதைப் போன்றதாகும். இதனைச் சில அறிஞர்கள் அனுமதித்திருந்தாலும், இந்தக் கருத்து பலவீனமானது ஆகும். இது நிச்சயமாக ஹராம் (விலக்கப்பட்டது) என்பதே சரியான கருத்தாகும்; ஏனெனில், பிரார்த்தனையின் போது அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனது பண்புகளையும் கொண்டல்லாமல் வேறு எதனைக் கொண்டும் அல்லாஹ்விடம் தவஸ்ஸுல் செய்ய முடியாது.

நான்காவது வகை: பிற்காலத்தைச் சேர்ந்த பலரின் வழக்கத்தில் இருக்கக்கூடிய வேண்டுதலாகும். அதாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமே நேரடியாகப் பிரார்த்திப்பதும், அவர்களிடம் உதவி தேடுவதும் ஆகும்; (மரணித்தவர்களிடமும், அவலியாக்களிடமும் உதவி தேடுவதும் இதற்குள் அடங்கும்). இது மிகப்பெரிய இணைவைப்பாகும். ஏனெனில், அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாத ஒரு விஷயத்தில் பிரார்த்தனை செய்வதும் உதவி தேடுவதும் வழிபாடாகும். எனவே, அந்த வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்குச் செலுத்துவது மிகப்பெரிய இணைவைப்பாகும்.

மூலநூட்கள்

இணைவைப்பும் அதன் வகைகளும்
துஆ
வணக்கத்திற்குரிய தகுதி

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android