புதிதாகப் பிறந்த பிறை விண்ணில் நிலைத்திருப்பதற்கு ஏதேனும் குறிப்பிட்ட கால அளவு நிபந்தனை இருக்கிறதா?

கேள்வி 1456

ஒவ்வொரு சந்திர மாதத்தின் தொடக்கமும் எந்த வழிமுறையின் மூலம் நிருபிக்கப்படுகிறது? மேலும், அடிவானத்தில் புதிதாகப் பிறந்த பிறை இவ்வளவு நேரம் வானில் நிலைத்திருக்க வேண்டும் என ஏதும் நிபந்தனை உண்டா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து வந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் எதனைத் திட்டவட்டமாக உணர்த்துகின்றனவென்றால்: ஷஃபான் மாதத்தின் முப்பதாவது இரவிலோ அல்லது ரமழான் மாதத்தின் முப்பதாவது இரவிலோ, சூரிய மறைவுக்குப் பிறகு நம்பகமான ஒரு முஸ்லிம் பிறையைக் கண்டுவிட்டால், அந்தப் பிறை மார்க்க ரீதியாக முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், அதன் மூலம் புதிய மாதத்தின் தொடக்கம் அறியப்படுமே தவிர, சூரிய மறைவுக்குப் பிறகு சந்திரன் அடிவானத்தில் எவ்வளவு நேரம் நிலைத்திருக்க வேண்டும் என்ற கால அளவை கணக்கிட வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. அது வெறும் இருபது நிமிடங்களாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரி. ஏனெனில், சூரிய மறைவுக்குப் பிறகு சந்திரன் மறைவதற்கு இத்தனை குறிப்பிட்ட நிமிடங்கள் வரைதான் தாமதிக்க வேண்டும் என்று வரையறுத்துக் கூறக்கூடிய எந்தவொரு சான்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இல்லை.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மூலநூட்கள்

பிறை பார்த்தல்

மூலம்

ஆய்வு மற்றும் பத்வாவுக்கான நிரந்தரக் குழு (10/91)

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android