ரமழானுக்கான முதற் பிறையை ஒவ்வொரு முஸ்லிமும் காண வேண்டும் என்பது நிபந்தனையா?

கேள்வி 1584

ரமழான் பிறை பார்க்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும், [நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோற்பீர்களாக] என்ற ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, தன் சொந்தக் கண்ணால் பிறையைப் பார்க்கும் வரை நோன்பு நோற்க மறுப்பவரை பற்றிய மார்க்கச் சட்டம் என்ன? அவர்களின் இந்த ஆதாரச் சமர்ப்பிப்பு (இஸ்தித்லால்) சரியானதா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

"நம்பகமான ஒரேயொரு முஸ்லிம் பிறையைக் கண்டு சாட்சியமளித்தாலும், அது உறுதி செய்யப்பட்டுவிட்டால் நோன்பு நோற்பது ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். ஒரு கிராமவாசி பிறையைக் கண்டதாகச் சாட்சியமளித்த போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களை நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டதே இதற்குச் சான்றாகும். அதேநேரம், [நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோற்பீர்களாக; மேலும் பிறையைப் பார்த்து நோன்பை விடுப்பீர்களாக] என்ற ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, ஒவ்வொரு தனிமனிதனும் தன் சொந்தக் கண்ணால் பிறையைப் பார்க்கும் வரை நோன்பு நோற்கக் கூடாது என்று வாதாடுவது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில், இந்த ஹதீஸ் ஒட்டுமொத்த உம்மத்திற்கும் விடுக்கப்பட்ட பொதுவான கட்டளையாகும்; அதாவது, ஒரேயொரு நம்பகமான முஸ்லிம் பிறையைக் கண்டு அது நிரூபிக்கப்பட்டுவிட்டால் நோன்பு கடமையாகிவிடும் என்பதையே இது குறிக்கிறது. (ஆதாரம்: ஃபதாவா அல்-லஜ்னதுத் தாயிமா - பாகம்: 10, பக்கம்: 94). நீதியான, நம்பகமான ஒரேயொரு முஸ்லிமின் பிறை பார்த்தல் சாட்சியே ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் நோன்பைக் கடமையாக்கப் போதுமானது என்பதை நிரூபிக்கும் இன்னொரு சான்றுதான், இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அவர்கள் கூறினார்கள்: [மக்கள் பிறையைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; அப்போது நான் பிறையைப் பார்த்த விபரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் தெரிவித்தேன். உடனே அவர்கள் நோன்பு நோற்றதுடன், மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.] (நூல்: அபூதாவூத், கிதாபுஸ் ஸவ்ம், பாடம்: ரமழான் பிறை சாட்சியத்தில் ஒரு தனிநபரின் சாட்சியம்).

ஆனால், சில பித்அத்வாதிகள் (மார்க்கப் புதுமைகளைச் செய்வோர்), 'ஒரு மனிதன் தன் சொந்தக் கண்ணால் பிறையைப் பார்க்கும் வரை அவன் மீது நோன்பு கடமையாகாது' என்ற தங்களின் வழிகெட்ட கொள்கையின் காரணமாக ஏனைய முஸ்லிம்களை விட்டும் நோன்பு நோற்பதில் காலம் தாழ்த்திப் பின்வாங்குகிறார்கள். ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இவர்களின் இந்த வாதத்தை அடியோடு நிராகரிக்கின்றன. இவர்களிடம் நாம் கேட்கிறோம்: அப்படியென்றால், கண்பார்வையற்றவர்களும், கண்பார்வை பலவீனமாக உள்ளவர்களும் என்னதான் செய்வார்கள்?

அல்லாஹுதஆலா கூறியிருப்பதைப் போன்றதே அவர்களிம் நிலவரம்:

 {நிச்சயமாக (அவர்களின்) கண்கள் குருடாகிவிடவில்லை; மாறாக, நெஞ்சுகளுக்குள் இருக்கும் அவர்களின் உள்ளங்களே குருடாகிவிட்டன } (சூரா அல்-ஹஜ்: 46).

மூலநூட்கள்

பிறை பார்த்தல்

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android